தேர்தல் தொடர்பாக தெளிவூட்டல்



(க.கிஷாந்தன்)
அட்டன் டிக்கோயா நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வானது 03.01.2018 அன்று காலை இடம்பெற்றது.
அட்டன் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஜெமில் தலைமையில் இந்த தோ்தல் தொடா்பில் வேட்பாளா்களை தெளிவூட்டும் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த வகையில் இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடவிருக்கும் அட்டன், டிக்கோயா போன்ற பிரதேசங்களில் இருந்து கட்சிகளின் வேட்பாளர்கள் வருகை தந்தனர்.
இதன்போது உள்ளுராட்சி தேர்தலில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் வேளையில் எவ்வாறான சட்டதிட்டங்களை கையாள வேண்டும் என சட்ட விதிகள் தொடர்பில் தலைமையக பொலிஸ் பரிசோதகர் ஜெமில் தெளிவுப்படுத்தினார்.