கிழக்கில் விலை மதிப்பு திணைக்களமொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும்



(அப்துல்சலாம் யாசீம் )

கிழக்கு மாகாணத்தில் விலை மதிப்பு திணைக்களமொன்றினை ஸ்தாபிக்கவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் பொது மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விஷேட கலந்துரையாடலொன்று இன்று (30) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடை பெற்றது.

இதில் கலந்து கொண்ட போதே கிழக்கு மாகாண ஆளுநர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை அம்பாறை பிரதான பஸ் தரிப்பிடத்தில்  நகர சபைக்குற்பட்ட 23 கடைகள் காணப்படுவதாகவும் அக்கடைகளுக்கு மாதாந்த வாடகை அதிகமாக பெறப்படுவதாகவும் பிரதேச சபையினால் இருபத்தாராயிரம் ரூபாய் விலை   மதிக்கப்பட்டிடிருந்த நிலையில் டென்டர் மூலமாக அதிக விலைக்கு  09 கடைகளை  பெற்றதாகவும் அக்கடைகளின் வாடகைப்பணத்தை செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் அப்பணத்தொகையை  குறைத்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

அதேவேளை மொத்தமாக காணப்படுகின்ற 23 கடைகளுக்கும் புதிதாக விலை மதிப்பினை பெற்றுக்கொள்ள நடவடிக்கை   எடுக்கு்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ்.அபே குணவர்தனவுக்கு  உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயாகமகே.மாகாண சபைகள் உள்ளுராட்சி ராஐாங்க அமைச்சர் சியானி விஐேவிக்ரம மற்றும் 
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ வணிகசிங்க.கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.