மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடு முழுவதும் மின் தடை?



எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நாடுமுழுவதும் குறிப்பிட்ட சில காலப்பகுதியில், மின்சார விநியோகத்தில் தடை ஏற்படும் நிலைமை உள்ளதாக இலங்கை மின்சார சபையினால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நுரைச்சோலை அனல்மின் நிலைய இயந்திரங்களின் பராமரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளது.
அதன் காரணமாக 45 நாட்கள் கால அவகாசம் அவசியம் என மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவள அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நிலவும் மின்சார விநியோக பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் 100 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
எனினும், தொழில்நுட்பக் குழு பொறியலாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக குறித்த யோசனையை நடைமுறைப்படுத்துவதில் பிரச்சினை உள்ளதாகவும்,
நீர்மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கப் பகுதிகளில் எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வரண்ட காலநிலை தாக்கம் செலுத்துவதாலும் சிக்கல் நிலையை ஏற்பத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் காரணத்தால் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மின்சார நுகர்வோரிடம் மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வள அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன கேட்டுக்கொண்டுள்ளார்.