(அப்துல்சலாம் யாசீம்)கிண்ணியா கச்சக்கொடித்தீவு பிரதேச சபைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன் வேன் மோதியதில் வேனில் சென்ற சிறுமி நேற்றிரவு (15) 10.40 மணியளவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி தம்பலகாமம் 99ம் கட்டையில் வசித்துவரும் யூசுப் யனீயா (ஒன்றரை வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
99ம் கட்டைப்பகுதியில் வசித்து வரும் காத்தான்குடியைச்சேர்ந்த ஹாரூன் (பலசரக்குக்கடை) தனது உறவினர்களை பார்ப்பதற்காக சென்று கொண்டிருந்த வேளை அவரது வேனுக்கு காற்று போய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பருடன் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த விபத்தில் தாய் படுகாயமடைந்த நிலையில் கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்த சிறுமியின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்ட லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன் விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment