கிழக்கு மாகாண பட்டதாரிகள் நியமனத்தில் எவ்வித அநீதியும் இழைக்கப்படவில்லை

(அப்துல்சலாம் யாசீம் )

கிழக்கு மாகாண பட்டதாரிகள் நியமனத்தில் எவ்வித அநீதியும்  இழைக்கப்படவில்லையென   கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள வேலையில்லா பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக வேலையில்லாப்பட்டதாரிகள் தங்களது  அதிருப்தியினை வௌிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளரொருவர் அவரிடம் வினவிய போது  "தான்
அறிந்த வரை நியமனத்தில் அநீதிகள் இடம் பெறவில்லையெனவும், நீதியின் பக்கம் தான் நிற்பதாகவும் அதனால் யாரும் நியமனம் வழங்கும் விடயத்தில் அதிருப்தியடையத்தேவையில்லையெனவும் தெரிவித்தார்"

அத்துடன் கிழக்கு மாகாண சபையால் கடந்த 2017ம் ஆண்டு 1440 பேருக்கு நியமனம் வழங்குவதற்கு அனுமதி கிடைத்ததாகவும் அதில் தமிழ் மொழி மூலமாக
ஆயிரத்தி ஜம்பது பேருக்கு அனுமதி கிடைத்ததுடன் சிங்கள மொழியில் 390 பேருக்கு நியமனம் வழங்க அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை முதற்கட்டமாக தொல்லாயிரத்தி ஜம்பத்தி எட்டு பேருக்கு தமிழ் மொழி மூலமாக நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிங்கள மொழியில்  நூற்றி அறுபத்தொன்பது பேருக்கும் மொத்தமாக 1127 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து இரண்டாம் கட்டமாக எதிர்வரும் மார்ச் மாதம் 03ம் திகதி சிங்கள மொழி மூலமாக 222 பேருக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதுடன் தமிழ் மொழி மூலமாக 91 பேருக்கும் மொத்தமாக 313 பேருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் திஷாநாயக்க தெரிவித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாணம் கல்வித்துறையில்  09ம் இடத்தில் காணப்படுவதுடன் கிழக்கு மாகாணத்தில் கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கிலேயே இந்நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் அதிகளவில் பற்றாக்குறையாக காணப்படும் பாடசாலைகளுக்கே ஆசி
​ரியர்களை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்யென   கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திஸாநாயக்க தெரிவித்தார்.

​ரியர்களை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்