முன்னாள் பொலிஸ் மா அதிபரைக் கைது செய்ய இடைக்காலத் தடை



லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கு தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவை கைது செய்வதை தடுத்து உயர் நீதிமன்றம் இன்று (28) இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 

முன்னாள் பொலிஸ் மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

முன்னாள் பொலிஸ் மா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த மனு மீதான விசாரணை முடிவடையும் வரை இந்த இடைக்கால தடை உத்தரவு அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.