எனது நண்பரை வெல்ல வையுங்கள் நான் நேரடியாக சேவை செய்வேன்



எனது நண்பரை வெல்ல வையுங்கள் நான் நேரடியாக சேவை செய்வேன்,#ஜனாதிபதி_தெரிவிப்பு
சுபைர் ஹாஜியார் அவர்களின் பிரத்தியோக அழைப்பை ஏற்று கெளரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்
தாய்மண்ணுக்கு வந்து உரையாற்றினார்.இதில் உரையாற்றும் போது அவர்கூறியதாவது,இந்த சுபைர் என்னோடு நீண்டகாலமாக அரசியல் ரீதியாக நட்பை பேணுபவர்.தான் மத்தியில் சுகாதார அமைச்சராக இருந்தபோது இவர் மாகாண சுகாதார அமைச்சராக எனது ஆலோசனையோடு செயல்பட்டவர்.காணிப்பிரச்சினை,வடிகாலமைப்பு ஏனைய பிரச்சினை களை அடிக்கடி என்னிடம் இம்மக்களுக்காக  பேசுபவர்.இவரை நீங்கள் வெல்லவைத்தால் கட்சியின் பிரதிநிதியாக இல்லாமல் ஜனாதிபதி யின் பிரதிநிதி யாக விசேடமாக சேவையாற்றுவேன் என்று பல விடயங்களை சுட்டிக்காட்டினார்.இந்நிகழ்வில் மாகாண ஆளுனர்,சிரேஷ்ட அமைச்சர் பெளசி,ஏனைய அமைச்சர்கள்,அதிதிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.