முறிகள் விவகார: ஆணைக்குழுவின் அறிக்கை மீதான பாராளுமன்ற விவாதம்



முறிகள் விவகார மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான பாராளுமன்ற விவாதம் இன்று நடைபெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இன்று பிற்பகல் 1 மணிக்கு பாராளுமன்றம்
 கூடவுள்ளது.

இரண்டாம் நாள் விவாதமாகவே, இன்றைய தின விவாதம் நடைபெறவுள்ளதாக எமது பாராளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்று கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி தொடர்பிலும் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.