தாடியை வைத்துக்கொண்டு ஊழல் செய்துவிட்டு சபையில் சிரிக்கின்றீர்கள்




தாடியை வைத்துக்கொண்டு ஊழல் செய்துவிட்டு சபையில் சிரிக்கின்றீர்கள் – சபையில் விமல் வீரவன்ச
-------------------------------------------------------------

ரிஷாத் பதியுதீன், தாடியை வைத்துக்கொண்டு ஊழல் செய்துவிட்டு சபையில் அமர்ந்துகொண்டு நான் சபையில் உரையாற்றும்போது சிரிக்கின்றார் என விமல் வீரவன்ச இன்று (19) பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் விசேட விவாதத்தின்போது சுமார் 15 நிமிடம் உரையாற்றிய கூட்டு எதிர் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பேசும்போது

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ரிஷாத் என்பவர் சென்ற அரசாங்கத்திலும் ஊழல் செய்துவிட்டு இந்த அரசாங்கத்திலும் தேர்தலுக்கு முன்னர் பாரிய ஊழல்களை செய்துவிட்டு நான்போகும் போது தாடியையும் வைத்துக்கொண்டு புன்னகைக்கிறார் என்று தெரிவித்தர்.

சென்றவருட வரவு செலவுத்திட்டத்தின்போது, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநயக்கவும் ரிஷாத் பதியுதீன் அமைச்சரைப் பார்த்து நீங்கள் தாடியை வைத்துக்கொண்டு அரிசியில் ஊழல் செய்கிறீர்கள் என சுட்டிக்காட்டியபோது ரிஷாத் அமைச்சர் அதற்கு பதில்கூற முடியால் மழுப்பியடித்தமை குறிப்பிடத்தக்கது.

ஊழலை எதிர்க்க ஜனாதிபதியின் புதிய செயற்திட்டம் தேர்தல் முடிந்து அடுத்தநாள் ஆரம்பித்துள்ள இத்தருணத்தில் ரிஷாத் பதியுதீன் அமைச்சரின் ஊழல்கள் இதன் மூலம் வெளிக்கொணரப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.