(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பாலையூற்று பகுதியில் நேற்றிரவு (20) ரயிலில் பாய்ந்து ஒரு பிள்ளையின் தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை, பாலையூற்று புகையிரத நிலைய விடுதியில் வசித்து வரும் பாத்திமா நப்ரா (22வயது) எனவும் தெரியவருகின்றது.
குடும்பதகராறு காரணமாக திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுக்குள் பாய்ந்ததாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment