வவுணதீவு கரவெட்டியில்,துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சடலம்



மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரவெட்டி பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை அதிகாலை வீட்டில் இருந்து சென்ற கரவெட்டியை சேர்ந்த 21 வயதுடைய மன்மதன் அருள்ராஜ் என்பவரே துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.ரி.நசீர் தெரிவித்தார். 

குறித்த இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு குற்ற தடவியல் பிரிவு பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டதுடன் திடீர் மரண விசாரணை அதிகாரியின் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)