(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை நகரிலுள்ள இரண்டு பொலிஸ் பிரிவுகளிலும் ஹெரோயின் மற்றும் கேரளா கஞ்சா,போதை மாத்திரைகளுடன் இரண்டு பேரை நேற்று (25) மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து சந்தேக நபரை சோதனையிட்ட போது 710 மில்லிகிரேம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் திருகோணமலை,மரத்தடி பகுதியைச்சேர்ந்த டெரோன் (23வயது) என்பவரே கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் நீதவான் முன்னிலையில் ஆஐர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை 05கிரேம் கேரளா கஞ்சா இரண்டு வகையான ஏழு போதை மாத்திரைகளுடன் திருகோணமலை.நீதிமன்ற வீதியைச்சேர்ந்த சத்திவேல் கிரிஷாந்தன் (30வயது) கைது என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment