அம்பாரை பள்ளிவாயல் மீதான தாக்குதல், மாவட்டத்தில் வியாழனன்று ஹர்த்தால்



பேரினவாத பௌத்த அமைப்புக்களின் முஸ்லிமகளுக்கெதிரான தொடர்ச்சியான அச்சுறுத்தல்களின் தொடர் நடவடிக்கையாக,கடந்த 26/02/2018 அம்பாரையில் காட்டு தர்பார் அரங்கேறியிருக்கின்றது.

அம்பாரை பள்ளிவாயலை உடைத்து, புனித குர்ஆனுக்குத் தீ வைத்து, முஸ்லிம்களின் பொளுளாதார மையங்களை உடைத்த சம்பவத்தைக் கண்டித்து நாளைய தினம்,அம்பாரை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில், அமைதியான முறையில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படவுள்ளது. இதற்கான அழைப்பினை அம்பாரை மாவட்ட முஸ்லிம் சமூக ஒன்றியம் விடுத்துள்ளது.