என் வழி தனி வழி



சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில், அவரை இன்று, ஞாயி"அரசியல் பயணத்துக்கு செல்வதால் எனக்கு பிடித்தவர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறேன்," என்று சந்திப்புக்கு பின் கமல்ஹாசன் தெரிவித்தார்.
வரும் பிப்ரவரி 21 தனது அரசியல் கட்சியை தொடங்கவுள்ளதாக கமல்ஹாசன் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்துடனான சந்திப்பு நட்பு ரீதியானது என்றும் அரசியல் ரீதியானது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். தமது அரசியல் பயணம் சிறப்பாக அமைய ரஜினி வாழ்த்து தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"பணத்துக்காகவோ, புகழுக்காகவோ கமல் அரசியலுக்கு வரவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். மக்களுக்கு நல்லது செய்வதுதான் முக்கியம்," என்று இந்த சந்திப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இருவரும் அரசியலில் இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு,"காலம்தான் அதற்கு பதில்சொல்லும்," என்று கமல்ஹாசன் கூறினார்.
"திரைப்படங்களில்கூட என்னுடைய பாணி வேறு கமல் பாணி வேறு. அதேபோல அரசியலிலும் எங்கள் பாணி வேறாகத்தான் இருக்கும்," என்று ரஜினிகாந்த் கூறினார்.ற்றுகிழமை, நடிகர் கமல்ஹாசன் சந்தித்துப் பேசினார்.