கடந்த வருடம் துறைமுக அதிகாரசபை பெற்றுக்கொண்ட இலாபத்தின் அடிப்படையில், அனைத்து துறைமுக பணியாளர்களினதும், அடிப்படைக் கொடுப்பனவுகள் 5000 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி, மேலதிகமாக மாதாந்தம் 5000 ரூபாயும் வழங்கப்படவுள்ளதுடன், மொத்தமாக 10,000ரூபாய் அதிகரிக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
குறித்த கொடுப்பனவு அதிகரிப்பால் துறைமுக அதிகாரசபை வருடாந்தம் 2300 மில்லியனை செலவு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Post a Comment
Post a Comment