(க.கிஷாந்தன்)
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரில் பால் பவுசர் ஒன்று ஐக்கிய தேசிய முன்னணியில் இம்முறை உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் கடை ஒன்றினை உடைத்துத் கொண்டு விபத்துக்குள்ளானதில் கடை சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் 04.02.2018 அன்று காலை 11.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
பால் பவுசரில் ஏற்பட்ட இயந்திர கோளாறினை செய்து விட்டு பரீட்சித்து பார்க்கும் போதே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது கடையில் உள்ளவர்கள் கடையுடன் உள்ள வீட்டில் இருந்ததால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
சம்பவத்தில் கடையின் பொருட்கள் மற்றும் கடை சேதமடைந்துள்ளன. இவ்விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment
Post a Comment