இலங்கை தொழிலளார் காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து முத்து சிவலிங்கம் இராஜினாமா செய்துள்ளதால், செயலாளர் பொறுப்புக்கு மேலதிகமாக தலைவர் பதவியையும் தான் ஏற்றுக் கொண்டதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் கூறியுள்ளார்.
இலங்கை தொழிலளார் காங்கிரஸின் நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஒன்றுக்கூடல் கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழில்நுட்ப கல்லூரியான சீ.எல்.எப். இல் இன்று (16) காலை இடம்பெற்றது.
காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் கூடப்பட்ட தேசிய சபை மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களால் இந்த நிர்வாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆறுமுகன் தொண்டமான் கூறியதாவது,
இதுவரை காலமும் காங்கிரஸின் தலைவராக செயல்பட்டு வந்த பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக தான் தலைவர் பதவியிலிருந்து விலகி கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அவருக்கு காங்கிரஸின் போசகராக பதவி வழங்கப்பட்டுள்ளது. அத்தோடு, நிதி காரியதரிசியாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ரமேஷ்வரனுக்கு வழங்க நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டு இந்த பதவியை வழங்கியுள்ளது.
காங்கிரஸின் பொது செயலாளராக இருந்த என்னை எதிர்வரும் காலங்களில் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக தலைவர் மற்றும் செயலாளர் பதவிகளை வகிக்க வேண்டும் என நிர்வாக சபை மற்றும் தேசிய சபை ஊடாக ஏகமனதாக ஏற்றுக்கொண்டு பொறுப்புகளை வழங்கியதாக ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
இந்த ஊடக சந்திப்பில் மத்திய மற்றும் ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், உப தலைவர் கணேசமூர்த்தி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.ராஜதுரை, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், ஏ.பி.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்துசிவலிங்கம் நேற்றைய தினம் (15) ஆரம்ப கைத்தொழில் பிரதியமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை கூறத்தக்கது.
(மலையக நிருபர் கிரிஷாந்தன்)

Post a Comment
Post a Comment