#IsmailUvaizurRahman.
பாக்கித்தான் (Pakistan, பாகிஸ்தான், (
pækɨstæn அல்லது
pɑːkiˈstɑːn; உருது: پاکستان), அதிகாரபூர்வமாக பாக்கித்தான் இசுலாமியக் குடியரசு (உருது: اسلامی جمہوریۂ پاکستان), ஆசியகண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். மக்கள் தொகை அடர்த்தி மிகுந்த நாடுகளில் பாக்கித்தானும் ஒன்று. பாக்கித்தானின் தலைநகர் இசுலாமாபாத். கராச்சி முக்கிய துறைமுகமும் தொழில் நகரமும் ஆகும். இந்திய எல்லையின் அருகில் உள்ள லாகூர் மற்றொரு முக்கிய நகரம்.
180 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பாக்கித்தான் ஆறாவது மிகுந்த மக்கள்தொகையுடையநாடாகும். 796,095 கிமீ2 (307,374 ச மை) பரப்பளவுள்ள இந்த நாடு இதனடிப்படையில் 36வது பெரிய நாடாக விளங்குகின்றது. தெற்கில் அரபிக்கடல் மற்றும் ஓமான் குடாவில் 1,046-kilometre (650 mi) தொலைவுள்ள கடற்கரையைக் கொண்டுள்ளது; கிழக்கில் இந்தியாவும் மேற்கில் ஆப்கானித்தானும்தென்மேற்கில் ஈரானும் வடகிழக்குக் கோடியில் சீன மக்கள் குடியரசும் எல்லைகளாக அமைந்துள்ளன. வடக்கில் ஆப்கானித்தானின் குறுகிய வாகான் இடைப்பகுதியால் தஜிகிஸ்தானிலிருந்து பிரிக்கப்பட்டுள்ளது. தவிரவும் தனது கடல் எல்லையை ஓமானுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.
தற்போது பாக்கித்தானாக அறியப்படும் பகுதியில் பல தொன்மையான நாகரிகங்கள் தழைத்துள்ளன. புதிய கற்காலத்தின் மெகெர்கரும் வெண்கல காலத்து சிந்துவெளி நாகரிகமும் குறிப்பிடத்தக்கன. இந்துக்கள், இந்தோ-கிரேக்கர்கள், முசுலிம்கள், துருக்கிய-மங்கோலிய மரபினர், ஆப்கானியர்கள், சீக்கியர்கள் போன்ற பல்வேறு சமய, பண்பாட்டு அரசர்கள் இங்கு ஆண்டுள்ளனர். இந்திய மௌரியப் பேரரசு, பெர்சிய அகாமனிசியப் பேரரசு, மாசெடோனியாவின் அலெக்சாந்தர், அராபிய உமையா கலீபகம், மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு மங்கோலியப் பேரரசு, முகலாயப் பேரரசு, துராணிப் பேரரசு, மராத்தியப் பேரரசு, சீக்கியப் பேரரசு மற்றும் பிரித்தானியப் பேரரசு போன்ற பல பேரரசுகளும் அரச மரபினரும் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். துணைக்கண்டத்தில் நிகழ்ந்த விடுதலைப் போராட்டங்கள் மற்றும் முகமது அலி ஜின்னாவின் பாக்கித்தான் இயக்கத்தினால் முசுலிம்களுக்கான நாடாக துணைக்கண்டத்தில் முசுலிம்கள் பெரும்பான்மையாக இருந்த மேற்கு, கிழக்குப் பகுதிகளை அடக்கிய பாக்கித்தான் 1947ஆம் ஆண்டில் உருவாயிற்று. 1956ஆம் ஆண்டில் தனக்கான அரசியலமைப்பை ஏற்று இசுலாமியக் குடியரசாகும் வரை பாக்கித்தான் டொமினியனாக இருந்தது. 1971ஆம் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பின்னர் கிழக்கு பாக்கிஸ்தான் பிரிந்து புதிய நாடாக வங்காளதேசம் உதயமானது.
நான்கு மாநிலங்களும் நான்கு கூட்டாட்சி ஆட்புலங்களையும் கொண்ட பாக்கித்தான் கூட்டாட்சிநாடாளுமன்ற குடியரசாகும். பல மொழிகளையும் பல இனங்களையும் இதே போன்ற பலவகை புவியியல், வனவாழ்வினங்களையும் கொண்ட பன்முக நாடாக பாக்கித்தான் விளங்குகின்றது. A regional and middle power, உலகில் மிகுந்த படைத்துறையினர் கொண்ட நாடுகளில் ஏழாவதாக உள்ளபாக்கித்தான் அணுவாற்றல் மற்றும் அணுவாயுத நாடாக, பிராந்தியத்தில் செல்வாக்குள்ள நாடாக[5][6]விளங்குகின்றது; முசுலிம் உலகில் அணுவாயுதம் கொண்ட ஒரே நாடாகவும் தெற்காசியாவில் இரண்டாவது நாடாகவும் விளங்குகின்றது. பகுதியும் தொழில்மயமான பொருளாதாரத்தையும், நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட வேளாண்மைத் துறையையும் கொண்டுள்ள பாக்கித்தான் உலகில் 26வது பெரிய பொருளாதாரமாகவும் பெயரளவு மொத்த தேசிய உற்பத்தி அடிப்படையில் 45வது பெரியநாடாகவும் விளங்குகின்றது. உலகில் விரைவாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.
விடுதலைக்குப் பின்னரான பாக்கித்தானின் வரலாற்றில் இடையிடையேயான படைத்துறை ஆட்சியும் அரசியல் நிலைத்தத் தன்மையின்மையும் இந்தோ-பாக்கித்தான் போர்களும் முக்கியப் பங்கேற்கின்றன. மிகுமக்கள்தொகை, தீவிரவாதம், ஏழ்மை, கல்வியின்மை, ஊழல் ஆகியன நாட்டின் முதன்மை பிரச்சினைகளாக உள்ளன. இவற்றிற்கிடையேயும் 2012ஆம் ஆண்டில் ஹேப்பி பிளானட் குறியீட்டில் 16வதாக வந்துள்ளது.[7] ஐக்கிய நாடுகள் அவை, நாடுகளின் பொதுநலவாயம், அடுத்த பதினொரு பொருளாதாரங்கள், பொருளாதார கூட்டுறவு அமைப்பு (ECO), காபி குழு, வளரும் எட்டு (D8), கெய்ர்ன்சு குழு, கியோட்டோ நெறிமுறை, அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை, இசுலாமிக் கூட்டுறவிற்கான அமைப்பு, சார்க் மற்றும் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.
பாகிஸ்தானின் 62 ஆவது குடியரசு தின நிகழ்வுகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
இஸ்லாமாபாத்தில் இன்று காலை குடியரசு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.
இவ்வாறான நிகழ்வொன்றிற்காக இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பாகிஸ்தானுக்கு சென்ற முதல் அரச தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்பதும் குறிப்பிடத்தக்கது.
1956 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23ஆம் திகதி பாகிஸ்தான் ஜனநாயகக் குடியரசாக மாற்றப்பட்டது.
அன்று முதல் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி குடியரசு தினம் கோலாகலமான முறையில் கொண்டாடப்படுகிறது.
இம்முறை பாகிஸ்தான் குடியரசு தின நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று (22) பாகிஸ்தானை சென்றடைந்தார்.
ஜனாதிபதியின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹூசைன் மற்றும் பிரதமர் ஷஹீத் கபான் அப்பாசி ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.


Post a Comment
Post a Comment