மஸ்கெலியவில் ஆட்சியமைக்கு முன்னர், இந் நிலை



மஸ்கெலியா தலைவர் தெரிவில் பதற்ற நிலை இரு சாரார்க்கிடையில் கல் வீச்சு
மஸ்கெலியா பிரதேச சபைக்கான தலைவர் தெரிவூ இன்று 2018.03.28 மத்திய மாகாண உள்ளுராட்ச் ஆளுனர் யூ.என்.பீ ஹேரத் தலைமையில் இன்று அரம்பமானது இதன்போது ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவான உறுப்பினர் வராததால் பதற்ற நிipல உருவானது இதனால் ஐக்கிய தேசிய கட்சியினை சேர்ந்த உறுப்பினர்கள் கறுப்பு பட்டி அணிந்து தனது எதிர்ப்பினை வெளிக்காட்டினர் இதனை தொடர்ந்து சபை தலைவர் தெரிவூ செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெற்றது
இந்த வாக்கெடுப்பில் இலங்கை தொழழிலாளர் காங்கிரஸ்ஸின் உறுப்பினர் கற்பகவள்ளி தலைவராகவூம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் உபதலைவராகவூம் தெரிவூ செய்யப்பட்டார்.
அதனை தொடர்ந்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் ஆதரவாளர்கள் ஊர்வலம் செல்ல முற்பட்டதனையடுத்து இருசாராருக்குமிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டு பின் அது கல்வீச்சாக மாறியது இக்கல்வீச்சில் சிலர் சிறிய காயங்களுக்கு உள்ளானதுடன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவூம் தெரிவிக்கப்படுகிறது.
இந்த கல்வீச்சி காரணமாக  பொது போக்குவரத்து தடைபட்டதுடன் வாகன நெரிசல் நிலையூம் ஏற்படடன இதனை இதனை தொடர்ந்து ஏனைய பொலிpஸ் நிலையங்களிலலிருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.
இந்த கல்வீச்சு சம்பவங்களுடன் இரு கட்சிகளினதும் அரசியல் பிரதிநிதிகளும் ஈடுபட்டதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றன.
இதே ஐக்கிய தேசிய கட்சியில் தெரிவான உறுப்பினர் நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மஸகெலியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.