இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, திகன, அகுரண, கலஹா, கடுகஸ்தொட ,மெனிக்கின்ன, அம்பதென்ன, பூஜாபிடிய ஆகிய பிரதேசங்களுக்குச் சென்று, அங்குள்ள மக்களது பிரச்சினைகளை ஆராய்ந்தார்.
கண்டி வியாபார சங்கத்தினருடன், இராணுவத் தளபதி பேச்சுவார்த்தைகளையும் மேற்கொண்டார்.
இந்தச் சந்திப்பின் போது, கடந்த சில நாட்களாக கண்டி மாவட்டத்தில் எற்பட்டிருந்த கலவரம் தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. மேலும், இராணுவத் தளபதி, இனங்களுக்கு இடையில் சமாதான நல்லிணக்கம் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.
மேலும், இப்பிரதேசத்தில் நிலையான சமாதான நல்லிணக்கத்தை மேம்படுத்தி இனங்களுக்கு இடையில் இருக்கும் பிரச்சினைகளைத் தனித்து சமாதானத்தை நிலை நாட்டும் நோக்கத்துடன், இலங்கை இராணுவத்தினர் இப்பிரதேசங்களில் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன், இப்பிரதேசங்களில் சமாதானத்தை நிலை நாட்டுவது இராணுவம் மற்றும் பொலிஸாரது பொறுப்புகள் மட்டுமின்றி இப்பிரதேசவாசிகள் ஆகிய நீங்களும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று இராணுவத்தினர் அப்பிரதேச மக்களிடம் கோரினர்.
மீண்டும் இப்பிரதேசத்தில் கலவர நிலைமைகளைத் தனித்து சமாதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இராணுவத்தினரது முழுமையான ஒத்துழைப்பு இந்தப் பிரதேசங்களில் வழங்குவார்கள் என்று இராணுவத் தளபதி மேலும் கூறினார்.
எதிர்காலத்தில் இப்படியான நிலைமைகள் வராமல் தடுத்து கலவரத்தின் போது சேதமாக்கப்பட்ட கட்டடங்கள் இந்த வருடம் எப்ரல் மாதம் ஆகும்போது அரச நிதி உதவியுடன் இராணுவத்தினரது ஒத்துழைப்புடன் நிர்மான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இராணுவத் தளபதி மேலும் கூறினார்.
இராணுவத் தளபதி கண்டி மாவட்ட செயலாளர் அவர்களைச் சந்தித்தும் கலந்துரையாடலையும் மேற்கொண்டார். அத்துடன், மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸ், 11ஆவது படைப் பிரிவன் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள் டயஸையும் சந்தித்து பாதுகாப்புத் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.


Post a Comment
Post a Comment