- எஸ்.ஜெகநாதன்-
யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் அனைவரையும் எதிர்வரும் திங்கட்கிழமை (12) காலை 8.30 மணிக்கு இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்று கூடுமாறு யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்க தலைவர் சி.கலாராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று (09) கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் தீர்மானத்துக்கு அமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (12) முதல், வேலை நிறுத்தத்தை மேலும் தீவிரப்படுத்துவதெனவும், நாடு முழுவதும் உள்ள போதனா வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய மருத்துவபீடங்களில் வழங்கிவரும் சேவைகள் நிறுத்தப்படும் எனவும், புதன்கிழமை (14) நண்பகல் முதல், நீர்வழங்கல், மின்சார பராமரிப்பு பணிகளை இடைநிறுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்துக்கு அமைய யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களை இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்று கூடுமாறு தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment