கிளைபோசேட் தடை நீக்கத்துக்கு, தனது கண்டனத்தை வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரளிய ரத்ன தேரர், இதற்கு, இன்றைய (28) அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி கிடைக்குமாயின், தான் வீதிக்கு இறங்கி போராட தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
கிளைபோசெட் தடை நீக்கத்துக்கு அனுமதி வழங்கப்போவது இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னிடம் உறுதியளித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இது ஜனாதிபதியின் தேர்தல் கால வாக்குறுதி என்றும் தெரிவித்தார்.
கிளைபோசெட் ஆதரவாளர்களை, எதிர்காலத்தில் குற்றவாளிகளாக அடையாளப்படுத்துவதற்கும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாகன வசதிகளுடன் சொகுசு வீடுகளில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து வருபவர்களும் பிள்ளைகளுக்கு வெளிநாட்டுக் கல்வியை வழங்குபவர்களும் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்தவர்களே என்று குற்றஞ்சாட்டிய அவர், இவ்வாறு பாதாள உலகக் குழுவில் அங்கம் வகிப்பவர்கள், நன்கு கற்றுத்தேர்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்றும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment