மலையக ரயில் சேவை பாதிப்பு



நேற்று இரவு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுள்ளை நோக்கி பயணித்த தபால் புகையிரதம் தெமேதர - எல்ல புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது. 

இதனால் மலையக பகுதிகளுக்கு பயணிக்கும் புகையிரத சேவைகள் தடைபட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவிக்கின்றது.