மட்டக்களப்பு விமான நிலையம் 1958 நவம்பர் 17 ஆம் திகதி சிவில் விமான சேவைகள் திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்டது. யுத்தம் காரணமாக கடந்த 25 வருட காலமாக இந்த விமான நிலையம் இராணுவ மற்றும் விமானப்படையினரின் நடவடிக்கைகளுக்காக மாத்திரம் பயன்படுத்தப்பட்டது.
நாட்டில் தற்போது சுமுக நிலை ஏற்பட்டுள்ளதை அடுத்து சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வசதியை முன்னிட்டு மட்டக்களப்புக்கு விமான சேவைகளை நடத்த தனியார் விமான சேவைகள் நிறுவனங்கள் முன்வந்துள்ளன.


Post a Comment
Post a Comment