காத்தான்குடி நகர சபைக்குது் தெரிவான நல்லாட்சிக்கான தேசிய முன்னணியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இருவர், காத்தான்குடி, ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப்பள்ளிவாசலில் ஜும்ஆத்தொழுகையின் பின்னர் பள்ளிவாசலில் வைத்து, இன்று (30) சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக அதன் தேசிய அமைப்பாளர் அஷ்ஷெய்ஹ் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி, இல்மி அஹமட்லெவ்வை ஆகிய இருவரும் இதன்போது உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளனர்.
இந்தக் கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் இருவரின் சத்தியப்பிரமாணம், வேறொரு தினத்தில் பிரத்தியேகமாக இடம்பெறுமென, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அறிவித்துள்ளது.
காத்தான்குடி நகர சபை தேர்தலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு 4 ஆசனங்கள் கிடைக்கப் பெற்றன. அதில் இரண்டு ஆண் உறுப்பினர்களும் இரண்டு பெண் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment