அதிகரிப்பு



இன்று (27) நள்ளிரவு முதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுவதாக லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதன்படி 12.5 கிலோ கிராம் லிற்றோ சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றின் விலை 245 ரூபாவினால் அதிகரிக்கப்படுவதாகவும் லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேலும், விலை அதிகரிப்பிற்கான அனுமதி நுகர்வேர் அதிகார சபையால இன்று கிடைக்கப்பெற்றதாகவும் லிற்றோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது