#REP/IRSAATH.
அக்கரைப்பற்று-06 மத்திய கல்லுாரிக்கு அருகில் உள்ள விவசாய சேவைத் திணைக்களத்திற்குச் சொந்தமான காணியில் இருந்து, எதிராளியான அக்கரைப்பற்று,மாவடிச் சந்தி வீதி, S.M சபிஸ் என்பவரை உடனடியாக எந்த வித அபிவிருத்தி வேலைகளையும் செய்யாமல் வெளியயேறுமாறும், அங்கு ஏற்கனவே அமைக்கப்பட்ட கட்டடங்களை
எதிர்வரும் 3 மாதங்களுக்குள் அகற்றுமாறும்,அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற கெளரவ நீதிபதி திரு. பீற்றர் போல் இன்று கட்டளை பிறப்பித்தார்.
இக் காணி தொடர்பில், விவசாய அபிவிருத்தித் திணைக்கள சட்டத்தின் கீழ், கமநல சேவைத் திணைக்களத்தினால் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதற்கு எதிராளிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி, இவ் வழக்கினை தொடுப்பதற்கான அதிகாரம், கமநல சேவைத் திணைக்களத்துக்கு கிடையாதெனவும், அவ்வாறு செய்வதாயின் கமநல சேவை ஆணையர் நாயகத்தின் அனுமதியின் பேரிலேயே செய்யப்பட வேண்டும் என்றும் ஆட்சேபனையினைத் தெரிவித்தனர்.
இதனால், இவ் வழக்கை முன்பு தள்ளுபடி செய்த அக்கரைப்பற்று நீதிமன்று, புதிய வழக்கினை ஆணையாளர் அனுமதி பெற்று தாக்கல செய்யலாம் என்றும் முறைப்பாட்டானரான, கமநல சேவைத் திணைக்களத்கதிற்கு அறிவுரை வழங்கியது.
அதனடிப்படையில். அக்கரைப்பற்று நீதிமன்றில் மீண்டும் வழக்கினை கமநல சேவைத் திணைக்களம் அண்மையில் தொடுத்த வேளையில், அக்கரைப்பற்று நீதிமன்றம் இக் கட்டளையை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment