எம் சமூகத்தினரையும் சற்று சிந்திப்போம்!.
அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவில் அக்கரைப்பற்று முடிவடைந்து, அட்டாளைச்சேனை துவங்கும் இடத்தில் அமையப் பெற்றுள்ளது, சலாமத் நகர் என்று அழைக்கப்படும் கோச்சுப்பெட்டிக் கிராமம்.
சலாமத் நகரில் அன்றாட வாழ்க்கையை கூட நடாத்த முடியாத 20ற்கும் மேற்பட்ட பல வறிய குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.தன் கணவனை இழந்து 6 பிள்ளைகளுடன் போறாடும் ஓர் குடும்பம்,ஒரு வேளை உணவுக்காக தவி தவிக்கும் குடும்பம்,தாய் தந்தையர் சுகவீனமுற்ற நிலையில் 16 வயது பெண் பிள்ளை வேலைக்கு சென்று உழைக்கும் ஓர் குடும்பம்,முறையான மலசல கூடம் இன்றி அல்லலுறும் ஓர் குடும்பம்,மின்சார கட்டணத்தை கட்ட முடியாது தனது நாளாந்த தொழிலை மேற்கொள்ள முடியாமல் மற்றுமொரு குடும்பம்.இவ்வாரு பல துன்பங்களை அனுபவித்து வரும் பல வறிய குடும்பங்கள் வசித்து வரும் கிராமமே இந்த கோச்சிப்பொட்டி கிராமம்.
தனவந்தர்களே,உதவி செய்யும் அமைப்புக்களே இவ்வாறானவர்களுக்கு உதவி செய்து இம்மையிலும் மறுமையிலும் நன்மைகளை பெற்றுக்கொள்ளுவோமாக!
முடியுமானவரை உதவ முன்வாருங்கள்.
தொடர்புகளுக்கு
சமட் மொவ்லவி-0779900856


Post a Comment
Post a Comment