ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.
இன்று காலை 09.30 மணிக்கு ஆரம்பமான அமைச்சரவை கூட்டத்தை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் புறக்கணித்திருந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணியை பிரதிநிதித்துவம் செய்யும் அமைச்சர்கள் மாத்திரம் கலந்து கொண்டிருந்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிப்பதற்கு நேற்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டிருந்தது.
அதன்படி எந்தவொரு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஊடகங்களிடம் கூறினார்.

Post a Comment
Post a Comment