யாழில், வாழை மடல்களில் இருந்து



(பாறுக் ஷிஹான்)
யாழ்ப்பாணம் நீர்வேலியில் அமைந்துள்ள வாழை மடல்களில் இருந்து அலங்கார பொருட்கள் தயாரிக்கும் நிலையத்தில் தயாரிக்கப்படும் அலங்கார பொருட்கள் வேகமாக பிரபலமடைந்து வருகின்றது.
உள்ளூர் மூலப்பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் இவை புலம்பெயர் மக்களிடமும் அதிக வரவேற்பை பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
மின்சாரத்தில் இயங்கும் இயந்திரத்தை உபயோகித்து வாழை மடல்களில் இருந்து பைபரைப் பிரித்தெடுக்கிறார்கள். அவ்வாறு பிரித்தெடுக்கப்படும் பைபரில் தொப்பிகள், பொம்மைகள், அலங்காரப் பொருள்கள், புத்தக அட்டைகள், தூசுதுடைப்பான் என பல்வேறுபட்ட பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன
இச்செயற்பாடு வாழை மடல்களில் இருந்து பைபர் (Fiber) நார்கள் பிரித்தெடுக்கும் செயற்பாட்டின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகிறது.