மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் கட்டுமுறிவு பகுதியில் புத்தாண்டு தினமான நேற்று (14) ஏற்பட்ட கை கலப்பில் குடும்பஸ்தர் ஒருவர் மண்வெட்டியால் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் 5 வயதுடைய பெண்பிள்ளை உட்பட இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
இராசைய்யா சவுந்தராஜன் என்ற 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்கள் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மது போதையில் இருந்த இருவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்தர்க்கத்தின் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் வாகரை பொலிசார் தெரிவித்தனர்.
(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)

Post a Comment
Post a Comment