எதிர்ப்பு போராட்டம் ஒன்றின் போது கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு கற்களை எறிந்தமை தொடர்பில் கதிர்காமம் பிரதேச சபைத் தலைவர் சானக அமில் ரங்கன உட்பட சந்தேகநபர்கள் இருவர் எதிர்வரும் 2 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை நேற்று திஸ்ஸமஹராம நீதவான் நீமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் கதிர்காமம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பு இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் நிலையத்திற்கு சேதம் ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


Post a Comment
Post a Comment