அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தி வருகின்றன.
பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த தாம் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சிரியாவின் ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் மீது தற்போது கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்திவருவதாக அவர் கூறியுள்ளார்.
"ரசாயன ஆயுதங்களை தயாரிப்பது, பரப்புவது மற்றும் பயன்படுத்துவதை வன்மையாகத் தடுக்கும் நோக்கிலேயே இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது," என்று டிரம்ப் கூறியுள்ளார்.
சிரியாவின் ரசாயண ஆயுதத் தாக்குதல்கள் குறித்து பேசியுள்ள அவர் "இந்தத் தாக்குதல்கள் ஒரு மனிதர் நடத்தும் தாக்குதல்கள் அல்ல. இவர் ஒரு அசுரனின் தாக்குதல்," என்று சிரியா அதிபர் பஷார் அல்-அசாத்தை அவர் விமர்சித்துள்ளார்.
கீழ்கண்ட இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அதிகாரி ஜோசஃப் டன்போர்டு கூறியுள்ளனர்.
டமாஸ்கஸில் ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்கள் தயாரிப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஓர் அறிவியல் ஆய்வு மையம்.
ஹோம்ஸ் நகரின் மேற்கே உள்ள சிரியாவின் ஓர் ஆயுதக் கிடங்கு.
ஹோம்ஸ் அருகே உள்ள ராணுவ கட்டளை மையம் மற்றும் ராணுவத் தளவாடங்கள் சேமிக்கும் இடமாக விளங்கும் ஒரு கட்டடம்.
கடந்த வாரம் சிரியாவின் டூமா நகரில் சிரியா படையினரால் நடத்தப்பட்ட நச்சுத் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. ரசாயணத் தாக்குதல் நடத்தியதை சிரியா மறுத்திருந்தது. சிரியா மீது ராணுவ நடவடிக்கை எடுத்தால் போர் மூளும் என்று ரஷ்யாவும் அமெரிக்காவை எச்சரித்திருந்தது.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே வெடிச் சத்தங்கள் கேட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
டமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் சிரியாவின் வான் பாதுகாப்பபு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் இல்லாமல் போகாது என்று சிரியாவின் முக்கியக் கூட்டாளியான ரஷ்யா அமெரிக்காவுக்கான தங்கள் நாட்டின் தூதர் மூலம் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
Statement by the Ambassador Antonov on the strikes on #Syria: A pre-designed scenario is being implemented. Again, we are being threatened. We warned that such actions will not be left without consequences. All responsibility for them rests with Washington, London and Paris.
பிரிட்டனின் டொர்னடோ ஜெட் போர் விமானங்கள், ரசாயன ஆயுதங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கு அமைந்துள்ள ஹோம்ஸ் நகரின் அருகே தாக்குதல் நடத்துவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோங் தங்கள் நாடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
சிரியாவின் பல்வேறு பகுதிகள் தொலைதூரம் சென்று தாக்கும் 'டோமாஹாக்' வகை ஏவுகணைகள் மூலம் தாக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறியுள்ளார்.
டமாஸ்கஸில் தாக்குதல் நடப்பதை சிரியாவின் அரசு தொலைக்காட்சியும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலைத் சிரியாவின் வான் பாதுகாப்பபு அமைப்புகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.
தலைநகர் டமாஸ்கஸில் உள்ள அறிவியல் ஆராய்ச்சி மையமும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பான சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹியூமன் ரைட்ஸ் தெரிவித்துள்ளது.
Post a Comment
Post a Comment