பண்டிகை காலத்தை முன்னிட்டு




பண்டிகைக் காலத்தில் பயணிகளின் நலன் கருதி 2,500 பேருந்து சேவைகள் நடத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது. 

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவும், இலங்கை போக்குவரத்துச் சபையும், பயணிகள் போக்குவரத்து அதிகார சபையும் இணைந்து 3,300 பஸ் சேவைகளை கடந்த சில நாட்களாக நடத்தியிருந்தன. 

நேற்றும் 2,500 பேருந்து சேவைகள் நடத்தப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். 

நாட்டின் முக்கியமான நகரங்களில் இருந்து ஏனைய பாகங்களுக்கு பேருந்து சேவைகள் நடத்தப்படுகின்றன. 

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு மேலதிக பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 

இந்த பேருந்துகளில் பயணம் செய்யும் எந்தவொரு பயணியும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலான கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை. எவரேனும் கூடுதலான கட்டணம் கேட்டால் தொலைபேசி வாயிலாக முறையிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கு 1955 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறு ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.