காணாமற்போன இளைஞர்கள் கண்டுபிடிப்பு



நக்கில்ஸ் வனப்பகுதியை பார்வையிட சென்று காணாமற்போயிருந்த 7 இளைஞர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தான் வழித்தவறி சென்றுள்ளதாக குறித்த இளைஞர் குழுவைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டாருக்குத் தொலைபேசி மூலம் அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, வீட்டார் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் அளித்த நிலையில், இவர்களை தேடும் பணியில் பன்வில, ரங்கல, உடுதும்பர, லக்கல மற்றும் ​இரத்தோட்டை ஆகிய பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸார் இணைந்து தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனர். .