வேன் - லொறி விபத்து



(க.கிஷாந்தன்)

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் செனன் பகுதியில் 09.04.2018 அன்று மாலை 5 மணியளவில் வேன் மற்றும் டிப்பர் ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான 11 பேர் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் செனன் பகுதியிலிருந்து வெளிஓயா பகுதியை நோக்கிச் சென்ற வேன் ஒன்றும் கினிகத்தேனை பகுதியிலிருந்து அட்டன் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் ரக லொறி ஒன்றும் செனன் சந்தியில் வைத்து இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வேனில் சென்றவர்களே கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், வேன் சாரதி வேனின் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றபோது கட்டுப்பாட்டுக்கு அப்பால் எதிரே வந்த டிப்பர் ரக லொறி மீது மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கடும்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 11 பேரில் மூன்று ஆண்களும், எட்டு பெண்களும் அடங்குவதாகவும், இதில் 17, 18 வயது நிரம்பிய இளைஞர், யுவதிகளே அதிகம் காணப்படுவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.