திருக்கோவிலில், வேகக் கட்டுப்பாடின்றி பயணித்தவர் பலி



REP/IRSAATH.

திருக்கோவில்,தாமரைக் குளத்தடியில், வேகக் கட்டுப்பாட்டினை இழந்து பயணித்த சாரதி, வீதிக் கட்டையில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். இறந்தவர் 34 வயது நிரம்பிய வினாயகபுரத்தைச் சேர்ந்த சசிதரன் என்பவராகும். நேற்று மாலை 3 மணியளவில், இச் சம்பவம் இடம் பெற்றது. வீதியோரத்தில் இரத்தம் பீறிட்ட நிலையில் தனியாக தனது மோட்டார்  சைக்கிள்  சகிதம், காணப்பட்ட உடலத்தை கண்ட அவ் வீதியால் சென்ற பொது மக்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.அதனையடுத்து ஸ்தலத்திற்கு விஜயம் செய்த பொலிசார், உரிய சடலம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டனர்.



இவரது பிரேதத்தை பார்வையிட்டு, மரண விசாரணையை அக்கரைப்பற்று ஆதார வைத்தயசாலையில் பதில் நீதிபதி எம்.ஐ.உவைசுர் ரஹ்மான் மேற்கொண்டு. பிரேதப் பரிசோதனையயை மேற்கொள்ள அம்பாரை சட்ட மருத்துவ அதிகாரிக்கு  உத்தவைிட்டார்.