பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் இணை நிறுவனமான வோல்ட் என்ட் ரோ நிறுவனத்தால் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பெயரில் வரையப்பட்ட 10 இலட்சம் ரூபாவான காசோலை, அந்தப் பாராளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்பு அதிகாரியால் வங்கியில் மாற்றப்பட்டு பாராளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கு நேற்று (24) விசாரணைக்கு வந்தபோது சட்ட மா அதிபர் சார்பில் ஆஜராகியிருந்த மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் யசந்த கோதகோ இந்த விடயங்களை நீதிமன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அதேநேரம் டப்ளியூ என்ட் மெண்டிஸ் நிறுவனத்தால் வரையப்பட்ட 10 இலட்சம் ரூபாவான காசோலை வங்கியில் மாற்றப்பட்டு இந்த இடத்தில் பெயர் வௌியிட முடியாத பிரபு ஒருவருக்கு அந்த நிறுவனத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவரால் வழங்கப்பட்டிருப்பதற்கும் சாட்சி இருப்பதாக மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.
காசோலையை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் அந்த நிறுவனத்தின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கறுப்பு நிற கார் ஒன்றில் அந்த முக்கிய பிரமுகர் இருந்துள்ளமைக்கும் சாட்சி இருப்பதாக மேலதிக சொலிசிஸ்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.
இதேவேளை சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூரில் வசித்து வருவதாக சர்வதேச பொலிஸார் அறிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment
Post a Comment