கண்டியில் விபத்து,பாதசாரி பலி



கண்டி - பேராதெனிய வீதியின் விலியம் கோபல்லாவ மாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்று பாதையின் குறுக்காக பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்