அரச குடும்ப திருமணம்: இளவரசர் ஹாரி - மெகன் மார்கில் திருமண நிகழ்வுகள்



இங்கிலாந்து ராணியின் பேரனும், வேல்ஸ் இளவரசர் சார்லஸ் மற்றும் மறைந்த வேல்ஸ் இளவரசர் டயானாவின் மகனுமான இளவரசர் ஹாரி, ஹாலிவுட் நடிகை மெகன் மார்க்கெலை மணமுடிக்கிறார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் உறுப்பினர் ஒருவர் அமெரிக்க நடிகையை திருமணம் செய்யும் மே 19 ஆம் தேதி இங்கிலாந்தின் மீது அனைவரின் கண்களும் இருக்கும். கற்பனை நிறைந்த தேவதைக் கதையில் வரும் திருமணம் போல் இந்த திருமணம் ஹாலிவுட் முதல் ஹம்ஸ்ஃபையர் வரை அனைவரது கற்பனையையும் கிளறும் விதமாக அமைந்துள்ளது.
பிரிட்டனில் இளவரசர் ஹாரி மற்றும் மெகன் மார்கில் திருமண விழா கொண்டாட்டங்கள் களைக்கட்டியுள்ளன.
விண்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடக்க உள்ள அவர்களின் திருமணத்திற்கு உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
Prince Harry arrives at Windsor Castleபடத்தின் காப்புரிமைAFP
04:06:இளவரசர்கள் ஹாரி மற்றும் வில்லியம் தேவாலயத்தை வந்தடைந்தனர்.
கேம்பிரிட்ஜின் கோமகனுடன் தேவாலயத்திற்கு வந்த இளவரசர் ஹாரி பதற்றமில்லாது அமைதியாக காணப்பட்டார்.
கேம்பிரிட்ஜின் கோமகனுடன் தேவாலயத்திற்கு வந்த இளவரசர் ஹாரி
Image captionகேம்பிரிட்ஜின் கோமகனுடன் தேவாலயத்திற்கு வந்த இளவரசர் ஹாரி
04:00: திருமணத்திற்கு இன்னும் அரை மணி நேரமே உள்ளது. விருந்தினர்கள் பலரும் வந்து கொண்டிருக்கின்றனர்.
03:51 தேவாலயத்திற்கு புறப்பட்டார் மணப்பெண் மெகன் மார்கில் .
தனது தாயுடன் மெகன் மார்கில், ரோல்ஸ் ராய்ஸ் காரில் புறப்பட்டுள்ளார்.
தேவாலயத்திற்கு மணப்பெண் மேகன் மார்கில் புறப்பட்டார்
Image captionதேவாலயத்திற்கு மணப்பெண் மேகன் மார்கில் புறப்பட்டார்
03:31 தொலைக்காட்சி பிரபலமான ஜேம்ஸ் கார்டன் தன் மனைவியுடன் திருமணத்திற்கு வந்துள்ளார்.
ஜேம்ஸ் கார்டன்படத்தின் காப்புரிமைPA
Image captionமனைவியுடன் ஜேம்ஸ் கார்டன்
03:16 புகழ் பெற்ற டென்னிஸ் வீராங்களை செரீனா வில்லியம்ஸின் உடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
03:15 புகழ்பெற்ற ரக்பி வீரர் ஜானி வில்கின்ஸன் தன் மனைவியுடன் திருமணத்திற்கு வந்தார்.
03:14 இளவரசர் ஹாரியின் முன்னாள் காதலிகள் திருமண விழாவிற்கு வருகை தந்தனர்.
க்ரெஸிடா பொனஸ் மற்றும் செல்ஸி டேவி ஆகியோருக்கு திருமண அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
Royal wedding, David Beckkam, Clooneyபடத்தின் காப்புரிமைPA
Image captionடேவிட் பெக்காம் மற்றும் நடிகர்கள் அமல் குளூனி, ஜார்ஜ் குளூனி
அமெரிக்க திரைப்பிரபலமான ஓப்ரா வின்ஃப்ரி, ஜார்ஸ் மற்றும் அமல் க்ளூனி, டேவிட் மற்றும் விக்டோரிய பெக்ஹம், புகழ் பெற்ற ரக்பி வீரரான ஜானி வில்கின்ஸன் ஆகியோர் திருமணத்திற்கு வருகை தந்துள்ளனர்.
US TV star Oprah Winfrey, wearing pink, and British actor Idris Elba arrive at the chapelபடத்தின் காப்புரிமைPA
திருமண நிகழ்வில் தனது தந்தை கலந்துகொள்ள மாட்டார் என்று மெகன் மார்கில் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
33 வயதான இளவரசர் ஹாரியிடம் திருமணம் குறித்து கேட்ட போது, அவர் "பதற்றமில்லாமல்" இருப்பதாக தெரிவித்தார். மெகன் மார்கில், தான் "அற்புதமாக உணர்வதாக" குறிப்பிட்டார்.
அரச குடும்ப திருமணத்திற்கு பிரிட்டன் பிரதமர் தெரீசா மே வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Theresa Mayபடத்தின் காப்புரிமைTHERESA MAY
திருமணம் அரசாங்கத்தின் விழா அல்ல என்பதினால், பிரதமர் மே உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.