இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச்சூடு - தாய் பலி, மகனுக்கு படுகாயம்



நிட்டம்புவ, ஹத்வடுன்ன பகுதியில் இன்று (24) மதியம் 12.55 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மகன் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்களே இந்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவத்தில் படுகாயமடைந்த தாயும் மகனும் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 53 வயது நிரம்பிய தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.