இடமாற்றம்



பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 17 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் சேவையின் தேவை நிமித்தம் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது. 

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு, பயங்கரவாத விசாரணைப்பிரிவு, நலன்புரி பிரிவு மற்றும் மட்டக்களப்பு, கேகாலை, மாத்தறை, கந்தளாய், அம்பாறை, வவுனியா, மாத்தளை, களணி, ஹெட்டன், அநுராதபுரம், காலி, பாணந்துறை ஆகிய பிரிவுகளில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கே இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.