கடுகண்ணாவயில் வாவியில் குதித்து ஒருவர் தற்கொலை



கடுகண்ணாவ, யட்டிநுவர டிப்போவுக்கு அருகில் நபர் ஒருவர் வாவி ஒன்றிற்குள் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

யட்டிநுவர டிப்போவுக்கு அருகில் உள்ள பாலத்தின் மேல் இருந்து அவர் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். 

கடுகண்ணாவ பொலிஸார் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.