மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் ஒருவர் தற்கொலை



திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தெகிவத்த பிரதேசம் கங்குவேலி கிராமத்தில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

மூன்று பிள்ளைகளின் தந்தை (வயது 36) ஒருவரே உயிரிழந்துள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் அவர் இவ்வாறு தற்கொலை செய்திருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்ததுள்ளது. 

உயிரிழந்த நபர் 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி திருமணம் முடித்தவர் என்றும் மூதூர் இரால் குழியை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திருமணம் முடித்த பின்னர் தெகிவத்த பிரதேசத்தில் வசித்து வந்துள்ளார். 

(திருகோணமலை நிருபர் கீத்)