(க.கிஷாந்தன்)
உலக தொழிலாளர் தினமான மேதினத்தை அரசாங்கம் எதிர்வரும் 7ம் திகதி அனுஷ்டிக்கும்படி கேட்டுக்கொண்ட போதிலும், 01.05.2018 அன்றைய மேதினத்தில் உலக தொழிலாளர்களுக்கு உரிமைகளை வென்றுக்கொடுத்த தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் முகமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கொட்டகலையில் அமைந்துள்ள சௌமிய மூர்த்தி தொண்டமான் தொழில் பயிற்சி நிலையத்தில் 01.05.2018 அன்று மேதின நிகழ்வை அனுஷ்டித்தது.
இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூவர்ண கட்சி கொடி ஏற்றப்பட்டு தொழிலாளர் கீதம் இசைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மத்திய, ஊவா மாகாண அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன், செந்தில் தொண்டமான், மத்திய, ஊவா மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற தலைவர், உபதலைவர், உறுப்பினர்கள் உள்ளிட்ட இ.தொ.காவின் மகளிர் பிரிவினர் ஆகியோருடன் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு கேட்போர் கூடத்தில் கூட்டம் ஒன்றும் இடம்பெற்றது.


Post a Comment
Post a Comment