அக்கரைப்பற்று-02ஆம் குறிச்சி, பட்டினப் பள்ளி வீதியினைப் பிறப்பிடமாகவும், பள்ளிக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட செம்புக் காதரின் மகனான
அக்கரைப்பற்று றிஸ்லி காதர் என்பவர் இன்று (20.05.2018) காலமானார்.
அக்கரைப்பற்று பட்டினப்பள்ளி வீதியின், 2/3 பொது வீதி சந்திக்கும், பாறுக் வீடியின் சந்தியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக் கொண்டது. மரணித்தவரான றிஸ்லி சைக்கிளை விட்டு வீழ்ந்து, கல்லில் அடிபட்டு சம்பவ இடத்தில் மரணமுற்றார்.
மற்றைய மோட்டார் சைக்கிளில் 3 பேர் பயணித்துள்ளனர் அவர்களில் ஒருவர் மட்டக்களப்பு பைவத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்கென அனுப்பப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய இரண்டு பேரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.
விபத்தில் சம்மந்தப்பட்ட யாருமே தலைக் கசவமின்றி பயணித்துள்ளார்கள் எனத் தெரிய வருகின்றது.
மரணித்த அக்கைரைப்பற்று றிஸ்லி,பள்ளிக்குடியிருப்பு கோழிக்கடை அத்தீல் என்பவரின் மருமகனும், குமைனூஸ் அவர்களின் சகோதரரும் , அப்றத் அவர்களின் மச்சானும், மல்வானை முபாறாக் மத்திய கல்லூரியின் அதிபர் Mr.றிசாத் அவர்களின் சகலனும் ஆவார்.
யாஅல்லாஹ் அல்லாஹு அன்னாரின் பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்.


Post a Comment
Post a Comment