தாமரைக்கேணியில், இளம் யுவதியின் உடலம்



ஏறாவூர் பொலிஸ் பிரிவு தாமரைக்கேணி, தக்வாப் பள்ளிக்கு அருகில் உள்ள வீடொன்றிலிருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. 

குறித்த சடலம் தாமரைக்கேணி கிராமத்தில் வசிக்கும் 17 வயதுடைய யுவதியுடையது என பொலிஸார் தெரிவித்தனர். 

சடலம் ஏறாவூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவருகின்றனர்.