பிரபல நடிகை தீபானி சில்வா பிணையில்



இன்று (28) அதிகாலை பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகை தீபானி சில்வாவிற்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. 

தீபானி சில்வாவை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

200,000 இலட்சம் ரூபா சரீர பிணையில் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை காயமடைந்த சிறுமியின் மருத்துவ செலவிற்காக 25,000 ரூபாவும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

விபத்தில் காயமடைந்த 10 வயதுடைய சிறுமி தொடர்ந்தும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்க