நுவரெலியாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டம்



(க.கிஷாந்தன்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் நுவரெலியா நகரில் 07.05.2018 அன்று இடம்பெற்றது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இம் மேதினத்தின் பேரணி நுவரெலியா நகர சுற்றுவட்டத்திற்கு முன்பாக ஆரம்பமாகி நுவரெலியா நகர மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மேடையை நோக்கி வந்தது.

இதன்போது இ.தொ.கா.வின் போசகரும், உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி பிரதி அமைச்சரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் உள்ளிட்ட ஊவா மாகாண அமைச்சா் செந்தில் தொண்டமான் கட்சியின் மத்திய மாகாண அமைச்சர் எம்.ரமேஷ்வரன், உட்பட காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மே தின கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடதக்கது.