அமைச்சர் ராஜிதவுக்கு விசேட விருது



தாதியர் சேவையின் தரத்தை உயர்த்துவதற்கு பல நடவடிக்கைகளை முன்னெடுத்தமை  காரணமாக சுகதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு விசேட விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச தாதியர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில், ​அரச தாதியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்கேற்புடன் இன்று (17) அலரி மாளிகையில் இடம்பெற்றது.